உள்ளூர் செய்திகள்
திருநாவலூர் அருகே தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல்- விவசாயி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45) விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் தனது சொந்த வேலைக்காக நத்தாமூர் கிராமத்தில் இருந்து கிளியூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் கிளியூரிலிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
கிளியூர் அருகே முனியப்பன் கோவில் பகுதி பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி பாலத்தில் இருந்த தடுப்பு கட்டையின் மீது வேகமாக மோதியது. இதில் ஏழுமலை தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.