உள்ளூர் செய்திகள்
.

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-04-08 17:01 IST   |   Update On 2022-04-08 17:01:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலை விரக்தியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர், 

சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு போக்குவரத்து டெப்போ பின்புறம் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது26). இவரது மனைவி பிரியா (22). இவர்களுக்கு திரும ணமாகி 5 வருடம் ஆகிறது.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரியா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தனிமையில் இருந்த ரமேஷ் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் அருகேயுள்ள கொல்லக் கொட்டாய் பகுதியில் உள்ள தனது அக்கா சித்ரா வீட்டில்  தங்கி வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில்கடந்த சில தினங்களாக வேலை இல்லாமல் தவித்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவரை சித்ரா ஆறுதல் கூறினார். 

இதையடுத்து இன்றுகாலை இயற்கை உபாதை கழிக்க செல்வதாக அக்காவிடம் கூறி சென்றார்.  வேலை கிடைக் காத விரக்தியில் மனமுடைந்து காணப்பட்ட ரமேஷ் அங்குள்ள மாந்தோப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுபற்றி அவரது அக்காவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இது குறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக கிடந்த ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News