உள்ளூர் செய்திகள்
கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஆய்வு

காரைக்கால் இந்திய கடலோர காவல் படை மையத்தில் நிரந்தர கட்டிடம் கட்டும் பணி- கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஆய்வு

Published On 2022-04-08 16:17 IST   |   Update On 2022-04-08 16:17:00 IST
காரைக்கால் தனியார் கப்பல் துறை முகத்தில் இந்திய கடலோர காவல் படை மைய ரோந்து கப்பல்களை நிறுத்துவதற்கான இட வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்திலுள்ள இந்திய கடலோர காவல் படை மையத்தில் நிரந்தர கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஆனந்த் பிரகாஷ் படோலா இந்த மையத்திற்கு வந்தார்.

தொடர்ந்து அவர் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இது குறித்து காரைக்கால் இந்திய கடலோர காவல்படை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் மைய கடலோர காவல்படையின் செயல்பாடுகள், ரோந்து கப்பல்களின் செயல் பாடுகள், மீனவர்களை பாதுகாக்கும் வகையிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், காரைக்கால் கடலோர போலீஸ் நிலைய போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆலோசனைகளை கிழக்குப் பிராந்திய கமாண்டிங் அதிகாரி வழங்கினார். மேலும், காரைக்கால் தனியார் கப்பல் துறை முகத்தில் இந்திய கடலோர காவல் படை மைய ரோந்து கப்பல்களை நிறுத்துவதற்கான இட வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News