உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் கல்லூரி மாணவிகள்-பெண்களை கிண்டல் செய்த 5 வாலிபர்கள் கைது

Published On 2022-04-08 11:15 IST   |   Update On 2022-04-08 11:15:00 IST
கல்லூரி மாணவிகள் பெண்களை கிண்டல் செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

உருளையன்பேட்டை போலீசார் நெல்லிதோப்பு மார்க்கெட் பகுதியில் ரோந்து பணி சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 கல்லூரி மாணவிகள் தங்களை 2 வாலிபர்கள் கேலி- கிண்டல் செய்வதாக போலீசாரிடம் கூறினர்.

இதையடுத்து அந்த வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 25) பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த சூர்யா (22) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

இதுபோல் லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி அருகே 3 வாலிபர்கள் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த லாஸ்பேட்டை போலீசார் 3 வாலிபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் புதுவை வினோபா நகரை சேர்ந்த பிரவின் (25) மற்றும் பத்மநாபன் (26) கிருஷ்ணா நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22) என்பது தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Similar News