உள்ளூர் செய்திகள்
பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாகூரில் திறன் மேம்பாட்டில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்

Published On 2022-04-08 11:07 IST   |   Update On 2022-04-08 11:07:00 IST
பாகூரில் உள்ள திறன்மேம்பாட்டு பயிற்சி மையத்தில் ஆரியா ஒர்க், ஸ்டோன் ஒர்க், ஜமிக்கி ஒர்க், போன்ற கை வேலைபாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
புதுச்சேரி:

தீபம் அறக்கட்டளை மற்றும் நபார்டு வங்கி இணைந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள புதுவையை சேர்ந்த சுய உதவி குழு பெண்களுக்கு குருந்தொழில் முனைவோர் பயிற்சி திட்டத்தின் மூலமாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, பாகூரில் உள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் ஆரியா ஒர்க், ஸ்டோன் ஒர்க், ஜமிக்கி ஒர்க், போன்ற கை வேலைபாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இதில், பாகூர் பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். கைவினை சேவை மைய உதவி இயக்குனர் வினோத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தீபம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஜோதி லட்சுமி, மேலாளர் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற பெண்கள், தங்களின் பயிற்சி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Similar News