உள்ளூர் செய்திகள்
.

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்

Published On 2022-04-07 17:07 IST   |   Update On 2022-04-07 17:07:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற கொள் ளையனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத் தனர்.
கிருஷ்ணகிரி, 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள  பக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது28). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திரும-ணமாகி மனைவி உள்ளார்.

இந்த நிலையில் இளவரசன் தனது சொந்த ஊருக்கு வந்து இருந்தார். பின்னர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று ஆம்பூரில் இருந்து பெங்களூருவிற்கு சென்று கொண்டிருந்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி பாஞ்சாலி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இளவரசன் இயற்கை உபாதை கழித்து கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் இளவரசன் மனைவியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். 

இதனை பார்த்த இளவரசன் ஒடி வந்து  திருடர்களுடன் போராடினார். உடனே அவர்கள் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து செயின் திருடனை பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் பிடிப்பட்டான். அவனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

இதையடுத்து அந்த திருடனை பிடித்து குருபரபள்ளி போலீசில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரி பழையபேட்டை தஞ்சாவூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்வா (வயது29) என்பது தெரியவந்தது. உடனே அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மற்றொரு திருடன் அதே பகுதியை சேர்ந்த பொன்னையன் (32) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News