உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் சாந்தி சிவசங்கர் பேசினார். அருகில் துணைத்தலைவர் ருக்மணி, செயல் அலுவலர் உமாமகேஸ்வ

நகருக்குள் உள்ள மதுபான கடை அகற்றப்படும்

Published On 2022-04-07 15:42 IST   |   Update On 2022-04-07 15:42:00 IST
பள்ளத்தூர் பேரூராட்சியில் நகருக்குள் உள்ள மதுபான கடை அகற்றப்படும் என நகராட்சி தலைவர் கூறினார்.
காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சியின் முதல் கூட்டம் பேரூராட்சி தலைவர் சாந்தி சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.   துணைத்தலைவர் ருக்மணி செயல் அலுவலர் உமா-மகேஷ்வரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் 11வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் கொத்தரி கருப்பையா பேசுகையில், பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் நிபந்த-னைகளை மீறி உள்வாடகைக்கு விட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது.நிபந்தனைகளை மீறிய கடைகளை மீட்டெடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

14வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சரோஜா பேசுகையில், இங்குள்ள அரிசி ஆலைகளால் காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது என்றார்.  இதற்கு பதிலளித்த செயல் அலுவலர் விரைவில் ஆலை அதிபர்களை அழைத்து  விதிமுறை-களின்படி சுத்திகரிப்பு செய்ய அறிவுறுத்துவோம் என்றார்.

13வது வார்டு தி.மு.க. உறுப்பினர் வடிவேல் பேசுகையில், பேரூராட்சி சாலைகளில் அடிக்கடி விபத்து ஏறடுகிறது. எனவே தேவையான இடங்களில வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார்.

தலைவர் சாந்தி சிவசங்கர் பேசுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து பொதுமக்களின் நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவின்படி நகரின் உள்ளே உள்ள மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் உடனடியாக சரி-செய்யப்படும் என்றார்.

Similar News