உள்ளூர் செய்திகள்
சந்தான முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சீர்காழி அருகே சந்தான முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி அருகே புளிச்சக்காடு நித்தியவனம் கிராமத்தில் புதிதாக சந்தான முத்துமாரியம்மன் கோவில் நிர்மானிக்கப்பட்டது. அதில் வினாயகர், பாலமுருகன், சந்தானமுத்துமாரியம்மன், பேச்சியம்மன், பலிபீடம் ஆகிய சுவாமி சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
திருப்பணிகள், வர்ணபூச்சு பணிகள் முழுமையடைந்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த (4&ம் தேதி) அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலைபூஜைகள் தொடங்கியது.
விழா அன்று 4&ம் கால யாகசாலை பூஜைகள் நிறை-வடைந்து, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடை-பெற்றது.
தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்-சாரியார்கள், வேத-விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, மேள, தாளங்களுடன் கோயிலை வலம் வந்து விமான கலசம், மூலஸ்தான விமானம் ஆகியவற்றில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை-பெற்றது.
தொடர்ந்து அனைத்து சுவாமி சன்னதிகளிலும், சுவாமிகளுக்கு நறுமண பொருட்களைக்கொண்டு மகா அபிஷேகம் செய்-விக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள், ஊர்- பிரமுகர்கள், கிராமவாசிகள் உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர்.