உள்ளூர் செய்திகள்
தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம்- தேவகோட்டை அருகே நல்லாங்குடி கிராமத்திலுள்ள வேம்புடைய அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நேற்று மாலை மற்றும் இன்று காலை 4 பிரிவுகளாக வெளிமுத்தி விளக்கில் இருந்து ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுவண்டிபந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, ராமநாத-புரம், தேனி, மதுரை, புதுக்-கோட்டை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
நேற்று மாலை நடைபெற்ற நடுமாடு பிரிவில் மதுரை மாவட்டம் நம்பியூர் முத்துக்கருப்பன் முதல் பரிசையும், சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் பாலு 2வது பரிசையும், நல்லாங்குடி முத்தையா சேர்வை 2வது பரிசையும், வெளிமுத்தி வாஹினி 4வது பரிசையும், நல்லாங்குடி சசிக்குமார் 5வது பரிசையும் பெற்றனர்.
இன்று காலை நடைபெற்ற பெரியமாட்டு பிரிவில் ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர் அப்துல்காதர் முதல் பரிசையும், நல்லாங்குடி முத்தையா சேர்வை 2வது பரிசையும், ராமநாதபுரம் மாவட்டம் மணிகண்டி மகாலிங்கம் 3வது பரிசையும், மதுரை மாவட்டம் நம்பியூர் முத்துக்கருப்பன், தேவகோட்டை வீரசேகர் 5வது பரிசையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாடுகளுக்கு மரியாதை செலுத்தி மாட்டின் உரிமையாளர்-களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை வழிநெடுகிலும் சாலையில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்