உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் தமிழ் வேத மந்திரங்கள் முழங்க திருமணம்
காரைக்கால் காமராஜ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவியரசன் கிருத்திகா- திருமணம் தமிழ் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
காரைக்கால்:
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்-லட்சுமி தம்பதி மகன் கவியரசன். காரைக்கால் கிளிஞ்சல்மேடு செல்வராஜ்-விஜயலட்சுமி தம்பதி மகள் கிருத்திகா. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர்கள் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி காரைக்கால் காமராஜ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவியரசன் கிருத்திகா- திருமணம் தமிழ் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. அதோடு தமிழக கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் திருமண மண்டபத்தில் அசத்தலாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காரைக்காலில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.