உள்ளூர் செய்திகள்
மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

Published On 2022-04-06 17:20 IST   |   Update On 2022-04-06 17:20:00 IST
சிவகங்கை அருகே திருப்பத்தூரில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது.
நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள செவ்வூரில் அரண்மனை வம்சத்தை சேர்ந்த பரம்பரையினர் என்று அழைக்கப்படும் செந்தில்பாண்டியன் தலைமையில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

முன்னதாக செவ்வூர் கிராமத்தில் உள்ள மந்தை முனீஸ்வரர், பொன்னம்பல விநாயகர், நாச்சியார் அம்மன், ஆதினமிளகி அய்யனார், பூசதோப்பு முருகன், பிரம்மஅய்யனார் கோவில் போன்ற வழிபாட்டு தலங்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டது. 

செவ்வூர் கிராமத்துக்கு உட்பட்ட சத்திரக்குடி, வலையன்பள்ளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான  வேலங்குடி, மலம்பட்டி, திருக்கோளக்குடி போன்ற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக் கானோர் மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்றனர். 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்குும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு தொழுவத்தில் இருந்தும், கட்டுமாடுகளாகவும் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்கமுயன்ற வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உடனடியாக மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் செவ்வூர்கிராமத்தை சேர்ந்த நாட்டார் நகரத்தார்கள் மற்றும் அனைத்து சமு தாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணிக்கான ஏற்பாடுகளில் பூலாங்குறிச்சி காவல்நிலைய காவலர்கள் ஈடுபட்டனர்.


Similar News