உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 150 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி மக்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 150 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி மக்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில் குமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரபு, அழகுவேல் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, அரசு, நகர செயலாளர் ஷியாம் சுந்தர், மாவட்ட சிறுபான்மை செயலாளர் ஜான்பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.