உள்ளூர் செய்திகள்
.

பணம் இல்லாததால் வடமாநில வாலிபர் கழுத்தறுப்பு கொள்ளையர்கள் ஆத்திரம்

Published On 2022-04-06 16:07 IST   |   Update On 2022-04-06 16:07:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பணம் இல்லாததால் வடமாநில வாலபரின் கழுத்தை கொள்ளையர்கள் அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓசூர், 

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் பபூன் (வயது 45). ஓசூர் வசந்த நகர் பகுதியில் தங்கியிருந்து பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்துவதற்காக கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளிக்கு சென்று மது அருந்தி விட்டு திரும்பி கொண்டிருந்தார். ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் அவரிடம் பணம் பறிக்க வழிப்பறி கொள்ளையர்கள் முயன்றனர். அப்போது பபூனிடம் பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், அவரது கழுத்தை கத்தியால் அறுத்தனர். இதில் பலத்த காயம் அடைந்து அலறினார். உடனே கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

பபூனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதுகுறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News