உள்ளூர் செய்திகள்
வாழைப்பழம் வீசும் திருவிழா நடந்தது.

பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா

Published On 2022-04-06 14:56 IST   |   Update On 2022-04-06 14:56:00 IST
தகட்டூர் மாப்பிள்ளைவீரன் கோவிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நடந்தது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கிராமத்தில் உள்ள மாப்பிள்ளைவீரன்  கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது.
கோவிலின் முக்கிய திருவிழாவான வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத திருவிழாவை பொட்டி தகட்டூர் பைரவநாத சுவாமி கோவிலில் இருந்து கப்பரை எடுத்து  சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வந்து மாப்பிள்ளை வீரன் கோவிலை  வந்துசேர்ந்தது.

பின்பு பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது.   இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழத்தை பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News