உள்ளூர் செய்திகள்
தீமிதி விழா நடந்தது.

மழை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Published On 2022-04-06 14:52 IST   |   Update On 2022-04-06 14:52:00 IST
திட்டச்சேரி அருகே மழை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழாவையொட்டி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி, பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் அம்மன் வீதியுலாவை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்.

Similar News