உள்ளூர் செய்திகள்
நாகை கிழக்கு கடற்கரை சாலை அடைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனர்.

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்

Published On 2022-04-06 14:40 IST   |   Update On 2022-04-06 14:40:00 IST
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகூர் வெட்டாற்று பாலம் அடைக்கப்பட்டு நாகை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகூர் வெட்டாறு பாலத்தின் மேல் தளம் உயர்த்துதல், பாலத்தில் அமைந்துள்ள விரிவாக்கம் இணைப்பு ஆகியவற்றை முழுமையாக மாற்றி அமைத்தல், தாழ்ந்துள்ள தூண்களை சுற்றி மணல் பரப்பை உறுத்தி படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கப் பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தடுப்புகள் கொண்டு நாகூர் வெட்டாற்று பாலம் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி களால் அடைக்கப் பட்டது.

பணிகள் தொடங்கப் பட்ட காரணத்தால் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து வாகனங்களும் வாஞ்சூர் சோதனைச் சாவடியில் இருந்து இடது பக்கம் திரும்பும் நாகூர் நகர சாலை வழியாகவும், புத்தூர் வழியாக வேளாங்கண்ணி, திருவாரூர் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல திருவாரூர், வேளாங்கண்ணியில் இருந்து புத்தூர் வழியாக கிழக்கு கடற்கரை செல்லும் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

Similar News