உள்ளூர் செய்திகள்
பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் பறிமுதல்
நாகை அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற 60 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் சரக்கு வாகனமான லாரி, டாடா மேஜிக் போன்ற வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்வதாக கலெக்ட ருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அதை தொடர்ந்து கடந்த மாத சாலை பாதுகாப்பு கூட்டத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வதை சோதனை இடுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
சோதனையில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 60 வாகனங்கள் சாலை வரி செலுத்தாமலும், தகுதிச்சான்று, பர்மிட் புதுப்பிக்கப்படாமலும் மற்றும் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக இயக் கப்பட்ட காரணத்திற்காக நாகை, வேதாரண்யம் போன்ற பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபு, நல்லதம்பி ஆகியோர் சோதனை செய்து 60 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
அதில் பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களும், 10 கல்வி நிலைய பஸ்களும், 25 டாட்டா வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வாகனங்களின் மூலம் அரசுக்கு ரூ.5 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து வாகன சோதனை செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார்.