உள்ளூர் செய்திகள்
கொலை

சங்கராபுரம் அருகே விவசாயியை அடித்துக்கொன்ற 3 பேர் கைது

Published On 2022-04-05 10:54 GMT   |   Update On 2022-04-05 10:54 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விவசாயியை அடித்துக்கொன்றது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கடுவனூரைசேர்ந்தவர் முனுசாமி. அவரது மகன் அரசு(வயது 40). பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், வெங்கடேசன். இவர்கள் இருவருக்கும் இடையே இடம் பிரச்சினையால் முன்விரோதம் இருந்தது.

கடந்த 31-ந்தே தி அரசு குடும்பம் குறித்து வெங்கடேசன் குடும்பத்தினர் தரக்குறைவாகபேசினர். இதனைதட்டிக்கேட்ட அரசுவை , வெங்கடேசன், அவரது மனைவி அரசிளங்குமாரி, தாய் ராணி, மகள்கள் சவுந்தர்யா, கவுசல்யா, குமார் மனை விதங்கமணி, இவரது மகன் ஜெகதீஷ் ஆகியோர் தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார், வெங்கடேசன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து, விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், தகராறில் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசு, நேற்று காலை இறந்தார். இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி , அரசிளங்குமாரி (40), ராணி(65), தங்கமணி(37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, கடுவனூர் பகுதியில் பதற்றம் நிலவியதால் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பிரேத பரிசோதனை முடிந்து அரசுவின் உடல் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் உடலை அடக்கம் செய்யாமல் 300-க்கும் மேற்பட்டோர், நேற்று திருவண்ணாமலை சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தாசில்தார் பாண்டியன், டி.எஸ்.பி., மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Tags:    

Similar News