உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள அந்தேரிப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணை நடத்தியதில் அவர்கள் சோனார அள்ளியை சேர்ந்த தேவன் (வயது51), சாமல்பட்டி அடுத்துள்ள பரசனூரை சேர்ந்த வீரசேகரன் (29), சாலமரத்துபட்டியை சேர்ந்த இளங்கோவன் (48) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.
இதனால் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.