உள்ளூர் செய்திகள்
.

மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு சண்டையை விளக்க வந்த முதியவரை கட்டையால் தாக்கியவர் கைது

Published On 2022-04-05 16:12 IST   |   Update On 2022-04-05 16:12:00 IST
மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் ஏற்பட்ட தகராறில் சண்டையை விளக்க வந்த முதியவரை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள ஆவத்தவாடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விக்னேஷ். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று விக்னேஷ் தனது பாட்டி மற்றும் தாய் ஆகியோரிடம்  மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்ய வந்தனர். 

அப்போது அங்கு வந்த மாணிக்கம் (வயது60) என்ற முதியவரை விக்னேஷ் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அந்த முதியவரின் கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுக்கப் பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News