உள்ளூர் செய்திகள்
பல ஆண்டுகள் மூடி இருந்த கடைகளை திறக்க நடவடிக்கை பேரூராட்சித் தலைவர் அம்சவேணி பார்வையிட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பஸ் நிலையத்தில் பல ஆண்டுகள் மூடி இருந்த கடைகளை பேரூராட்சித் தலைவர் அம்சவேணி பார்வையிட்டார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் உள்ள நான்கு கடைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் கவனத்திற்கு கொண்டு வந்து மனு அளித்தனர்.
இதனடிப்படையில் கடைகளை பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில் குமார், துணைத்தலைவர் மாலினி மாதையன், செயல் அலுவலர் முருகன், பொறியாளர் அருணகிரி, கடைகளை பார்வையிட்டனர்.
அப்போது கடைகளை மீண்டும் புதுப்பித்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கூறினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ராஜன், பேரூராட்சி அவைத்தலைவர் சென்ன கேசவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கீதா ஞானசேகரன், கோகுல்ராஜ், நித்யா முத்துக்குமார், தமிழ்செல்வி சோபன் பாபு , அமுதா பழனி, பாரதிராஜா, தினேஷ் உள்பட பலர் உள்ளனர்.