உள்ளூர் செய்திகள்
மாஸ்தப்பா கைது செய்த காட்சி.

அஞ்செட்டி வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த தொழிலாளி சிறையில் அடைப்பு

Published On 2022-04-05 14:54 IST   |   Update On 2022-04-05 14:54:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனப்பகுதியில் மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் தருமபுரி வனப்பாதுகாவலர் பெரியசாமி மற்றும் ஓசூர் வனக்கோட்டை வன உயிரின காப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு அஞ்செட்டி வனச்சரக அலுவலர் சீதாராமன் தலைமையில் வன ஊழியர்கள் உப்ராணி காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அந்த வழியாக நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த நபர் வனத்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே வனத்துறையினர் அந்தப் நபரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். 

அவர் அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாஸ்தப்பா (வயது40) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து கள்ளத்துப்பாக்கி வாங்கிக்கொண்டுவந்து உப்பு ராணி வனப்பகுதியில் நுழைந்தது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து கள்ள நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறைச்சாலையில் அடைத்தனர்.

Similar News