உள்ளூர் செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார மேளா
அரியூர் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார மேளா அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
புதுவை அரசு சுகாதாரத்துறை சார்பில் அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அளவிலான சுகாதார மேளா நடந்தது.
கர்ப்பிணி பெண்கள், தாய்மார்களுக்கு சிறப்பு சிகிச்சை, பிறந்த குழந்தைகள் முதல் அனைத்து குழந்தைகளுக்கும் உடல் நல பரிசோதனை, வளர் இளம் பருவத்தினருக்கான சிறப்பு ஆலோசனைகள், 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பல், கண் மருத்துவம், குடும்பக்கட்டுப் பாட்டு சிகிச்சைகள். ஆயுர்வேத மருத்துவம், பிரதமர் மருத்துவ காப்பீடு திட்ட பதிவு செய்தல், யோகா பயிற்சிகள் நடந்தன.
முகாமை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் ஆனந்தலட்சுமி, குடும்ப நலம் துணை இயக்குனர் ரகுநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பிரேமா மற்றும் ஊழியர்கள் முகாம் ஏற்பாடுகளை செய் திருந்தனர்.