உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சட்டமன்றத்தை தி.மு.க. முற்றுகையிடும் போராட்டம்

Published On 2022-04-05 14:20 IST   |   Update On 2022-04-05 14:20:00 IST
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுவை சட்டமன்றத்தை தி.மு.க. முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சிவா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

5 மாநில தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தினமும் பெட்ரோல் டீசல் விலையும், சமையல் கியாஸ் விலையும் உயர்த்தப் பட்டு வருகிறது. 

அத்துடன் டோல்கேட் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும்  உயர்ந்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவார்கள். மேலும், பஸ் கட்டண உயர்வுக்கும் இது வழிவகுக்கும்.

 இதுமட்டுமல்லாமல் மத்திய அரசு 850 வகையான உயிர்காக்கும் மருந்துகள் விலையையும் 11 சதவீதம் அளவிற்கு உயர்த்தியுள்ளது.  இதனால் நோயாளிகள் மருந்து, மாத்திரைகளை முறையாக சாப்பிடுவதையே கைவிட்டுவிடுவர். 

எனவே மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்தும், புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு எடுத்து வருவதை கண்டித்தும், மின்துறை பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை கைவிட்டு, நிரந்தரமாக எடுக்க வலியுறுத்தியும் வருகிற 7-ந் தேதி காலை 10 மணியளவில் தி.மு.க. சார்பில் புதுவை சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். 

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News