உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஒட்டன்சத்திரம் அருகே மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்

Published On 2022-04-05 05:43 GMT   |   Update On 2022-04-05 05:43 GMT
ஒட்டன்சத்திரம் அருகே 2-வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோ.கீரனூர் பகுதியில் கடந்த மாதம் 24ந் தேதி அதிகாலை நேரத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகளில் லேசான விரிசல்கள் ஏற்பட்டு மேற்கூரைகளும் பெயர்ந்து விழுந்தன.

ரிக்டர் அளவுகோலில் 1.5 ஆக இது பதிவானது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்த நிலையில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அடுத்தடுத்து 3 முறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இப்பகுதியை சுற்றி 5 கி.மீ தூரத்தில் கல் குவாரிகள் உள்ளன. இங்கு சக்திவாய்ந்த பாறைகளை வெடிக்க வெடி பொருட்கள் பயன்படுத்தப் படுகிறது. இதன் காரணமாக இங்கு வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறதா? என பொதுமக்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

எனவே புவியியல் துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு தெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2வது முறையாக உணரப்பட்ட நில அதிர்வால் மக்கள் தூக்கமின்றி வீட்டுக்குள் தங்க பயந்து வெளி இடத்தில் தூங்கினர்.
Tags:    

Similar News