உள்ளூர் செய்திகள்
நாய் சிலைக்கு வழிப்பாடு செய்யும் முதியவர்

சிவகங்கையில் நெகிழ்ச்சி- இறந்த நாய்க்கு சிலை வைத்து வழிபாடு செய்த 82 வயது முதியவர்

Published On 2022-04-05 10:35 IST   |   Update On 2022-04-05 10:51:00 IST
எதிர்காலத்தில் நாய்க்கு கோவில் கட்ட திட்டமிட்டுள்ளதாக முதியவர் முத்துவின் மகன் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த 82 வயது முதியவர் முத்து. இவர் 'டாம்' என்கிற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இது கடந்த 2021-ம் ஆண்டில் உயிரிழந்துள்ளது.

இதனால் வேதனையில் இருந்த முதியவர், டாமின் நினைவாக மானாமதுரையில் சிலை ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு, மாலை, ஆடை அணிவித்து வழிபாடு செய்த நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.

இதுகுறித்து முதியவர் முத்து கூறுகையில், " என் பசங்களைவிட என் நாய் மீது அதிகம் பாசம் கொண்டேன். 2010-ம் ஆண்டு முதல் என்னுடன் இருந்தது. 2021-ல் இறந்துவிட்டது. என் தாத்தா, பாட்டி, தந்தை என அனைவரும் நாய் பிரியர்கள்" என்றார்.

மேலும் முத்துவின் மகன் மனோஜ் குமார் கூறியதாவது:-

இறந்த டாம் நாய்க்கு ரூ.80 ஆயிரம் செலவில் இந்த பளிங்கு சிலை செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாய்க்கு கோவில் கட்ட திட்டமிட்டுள்ளோம். புனித நாட்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னதானம் செய்து சிலைக்கு மாலை அணிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. போட்டோ ஷூட் நடத்திய போது ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி- திருமணமான 20 நாளில் பரிதாபம்

Similar News