உள்ளூர் செய்திகள்
தேர்வு

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்

Published On 2022-04-04 11:56 GMT   |   Update On 2022-04-04 11:56 GMT
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசுகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டு வருகிறது.
  
அரசு வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் இங்கு நடைபெறும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நிலை2, நிலை2 அ(tnpsc GR-II & II A)  தேர்வுகளுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 50 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். 

மேலும், தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமத்தால் 444 உதவி ஆய்வாளர் (காவல்) பதவிக்கு காலிப்பணியிடங் கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வேலை நாளில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நாளை (5ந்தேதி) முதல் பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த வகுப்புகள் தொடர்பான முழு விபரங்களை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவ லகத்தை நேரடியாகவோ அல்லது 04575 240435 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே, இந்த நேரடி பயிற்சி வகுப்புகளில் மேற்காணும் போட்டித் தேர்விற்கு பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News