உள்ளூர் செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க விழா நடந்தது.

அரசு அலுவலர்கள் சங்க விழா

Published On 2022-04-04 16:59 IST   |   Update On 2022-04-04 16:59:00 IST
மானாமதுரையில் ஓய்வுபெற்ற அரசுஅலுவலர்கள் சங்கவிழா நடந்தது.
 மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் 35வது ஆண்டுவிழா நடந்தது.  தலைவர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார், பொருளாளர் சோமசுந்தரம் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். 

மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுசாமி, வார்டு உறுப்பினர்கள் இந்துமதி, புருஷோத்தமன், மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். 

தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் மறைவிற்குப் பின் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் கருணைத் தொகையை ரூ 500லிருந்து ரூ.1000ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News