உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே விபத்து: கார்- 2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தந்தை-சிறுமி சாவு: 4 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை & மகள் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கலுகொண்டபள்ளி-தளி செல்லும் சாலை யில் உள்ள தனியார் கம்பெனி அருகே, ஒரு கார் நேற்று இரவு தாறுமாறாக சென்றது. இதனை ஓட்டிச்சென்ற ஹரீஷ் ரெட்டி என்பவர், குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த கார், எதிரே வந்த ஒரு ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில், ஸ்கூட்டரில் வந்த ஓசூர் சின்ன எலசகிரியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 35, அவரது மகன் மகேஷ் (7), மற்றும் மகள் பிரீத்தா (8) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில், மஞ்சுநாத் மற்றும் சிறுமி பிரீத்தா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிறுவன் மகேஷ் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பேள கொண்டபள்ளியை சேர்ந்த சச்சின் (21) மற்றும் ராஜேஷ்(24) ஆகியோரும் காரை ஓட்டி சென்ற மற்றும் ஹரீஷ் ரெட்டியும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிசிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.