உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் பகுதியில் மணல் கடத்தல்
புதுப்பாலப்பட்டு, பாச்சேரி, மோட்டாம்பட்டி பகுதியில் தற்போது மணல் கடத்தல் அதிகமாக நடக்கிறது.
சங்கராபுரம்:
சங்கராபுரம் பகுதியில் பூட்டை, புதுப்பாலப்பட்டு, பாச்சேரி, மோட்டாம்பட்டி பகுதியில் தற்போது மணல் கடத்தல் அதிகமாக நடக்கிறது. தொடர் வெயில் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் குறைந்ததால், மணல் கடத்துபவர்கள் ஆற்றிலிருந்து மணலை வாகனங்களில் கடத்தி செல்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.