உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வேண்டும்- அ.தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2022-04-04 14:55 IST   |   Update On 2022-04-04 14:55:00 IST
வல்லுனர் குழு அமைத்து தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் தனியார்களால் நடத்தப்படும் மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், கிளினிக்குகள் ஏராளமாக உள்ளன.

அங்கு  கட்டணங்கள், உள்கட்ட வசதிகள், அறுவை சிகிச்சை ஆய்வு கூடங்கள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மருத்துவ சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது சுகாதாரத்துறையின் கடமையாகும். 

எனவே, முதல்-அமைச்சர் மனித உயிர் சம்பந்தமான பிரச்சினையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, சிறப்பு வல்லுனர்களை கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும். 

அந்த குழு வெளிப்படையான எவ்வித விருப்பு வெறுப்பின்றி புதுவை மாநிலத்தில் இயங்கும் தனியார் மருத்துவ மனைகளை ஆய்வு செய்து அதன் குறைகளை திருத்திக் கொள்ள உரிய வழிவகை எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

Similar News