உள்ளூர் செய்திகள்
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாவூரணியில் தொழிலதிபர் அழகப்பன் வீட்டில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டின் காவலாளி வட்டாயுதம் பலத்த தீக்காயம் அடைந்தார்.
சம்பவம் குறித்து துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், தாலுகா காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தினர்.
தனிப்பிரிவு காவலர் கர்ணன் கொடுத்த தகவலின்படி செங்கற்கோவிலார் வீதியை சேர்ந்த தனுஷ் (18) மற்றும் 2 சிறுவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.
சிறுவர்களை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.