உள்ளூர் செய்திகள்
கூட்டம்

ஹரிவராசனம் பாடல் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு

Published On 2022-04-03 16:49 IST   |   Update On 2022-04-03 16:49:00 IST
ஹரிவராசனம் பாடல் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தென் தமிழ்நாடு மண்டல செயற்குழு கூட்டம் பர்மா காலனி சிவானந்தா மகாலில் நடைபெற்றது.மாநில செயலாளர் ஆதிகணேசன் வரவேற்றார்.

மாநில தலைவர் ராஜகோபால் துரைராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் கமலம் நீலகண் டன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். தேசிய பொதுச்செயலாளர் ராஜன், தேசிய செயலாளர் கணேசன் ஆகியோர் கொடியேற்றி பேசினர்.

இதில் 1923ம் ஆண்டு கேரளாவின் கோனகத்து ஜானகியம்மாள் இயற்றிய ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழாவை வரும் ஜூன் மாதம் முதல் 2024 ஜனவரி வரை ஹரிவராசனம் நூற்றாண்டு விழாக்குழு அமைத்து கொண்டாடுவது, சபரிமலை வரும் பக்தர்களுக்காக 60 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒன்று என அன்னதான கூடங்கள் அமைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிவகங்கை மாவட்ட அய்யப்ப சேவா சமாஜத்தின் மாவட்ட உறுப்பினர்கள் மதி, சுந்தர், செல்வமணி, அண்ணாமலை, கணேசன், கரூர் செல்வம், வெங்கடேஷ், காரைக்குடி கரிசாமி, அய்யப்பா செல்வராஜ் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் இணைந்து பாடிய ஹரிவரா சனம் பாடலின் தமிழ்ப் பதிப்பு பாடப்பட்டது.

Similar News