உள்ளூர் செய்திகள்
தேவகோட்டையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.
தேவகோட்டை
தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார் ஊரணி சாரதா நகரில் அமைந்துள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது.
கடந்த 29ந்தேதி நவசக்தி ஹோமம், கணபதி ஹோமத்துடன் காப்புக் கட்டுதல் தொடங்கியது. மாலை சக்தி கரகம் எடுத்து வீதி உலா நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மீனாட்சி, காமாட்சி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, ஐஸ்வர்யா லட்சுமி, அங்காள பரமேஸ்வரி, கனகதுர்க்கை என சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்ற நம்பிக்கையில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனை நடைபெற்றது. 5ந்தேதி அம்மன் கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்து வீதி உலா மற்றும் 6ந்தேதி காலை பால்குடம் எடுத்து பூக்குழி இறங்குதல் அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெறும்.