உள்ளூர் செய்திகள்
டாக்டர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சட்டம் இந்திய மருத்துவ சங்கத்தினர் வலியுறுத்தல்
டாக்டர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சட்டம் வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஓசூர்,
இந்திய மருத்துவ சங்கத்தின் ஓசூர் கிளை தலைவரும், குணம் மருத்துவமனையின் இயக்குனராக,டாக்டர் பிரதீப்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
ராஜஸ்தான் மாநிலத்தில், அர்ச்சனா சர்மா என்ற மூத்த மகப்பேறு டாக்டர், பணியின்போது, ஒருபெண்ணுக்கு சரியாக சிகிச்சை யளிக்கவில்லை என்றும், அதனால், அந்த பெண் இறந்து விட்டதாகவும், சிலரால் தவறாக சித்தரிக் கப்பட்டு டாக்டர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக டாக்டர் அர்ச்சனா சர்மா தற்கொலை செய்துகொண்டார். டாக்டர்களுக்கு பாதுகாப்பில்லாத இந்த சூழ்நிலையை கண்டித்து, நேற்று இந்திய மருத்துவ சங்கம் சார்பில், நாடு முழுவதும் ஒரு நாள் அடையாளவேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோய் பிரிவு மற்றும் வழக்கமான பணிகள் செயல் படவில்லை. இந்திய மருத்துவ சங்கத்தின் ஓசூர் கிளையை சேர்ந்த 150 டாக்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அர்ச்சனா சர்மா மீது தவறான வழக்கு பதிவு செய்த போலீ சார் மீது உடனடியாக வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, டாக் டர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. டாக் டர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க மத்திய அரசு, சட்டம் இயற்றுவது மிகவும் அவசியமாகும். மேலும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்புக் கேட்கும் வழக்குகளில் இருந்து மருத்துவ துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
அப்போது, சங்கத்தின் துணைத்தலைவர் செந்தில், செய லாளர் பூபேஷ் கார்த்திக், பொருளாளர் நவீன்குமார், மற்றும் சங்க நிர்வாகிகள், மூத்த டாக்டர்கள் உடன் இருந்தனர்.