உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்ள ஓசூரில், 5 இடங்களில் போக்குவரத்து நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக 5 இடங்களில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூரில், மாவட்ட எஸ்.பி.சரோஜ்குமார் டாகுர் நடவடிக்கையின் பேரில், 5 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பொதுமக்கள் நடைபயணம், சைக்கிளிங், ஜாகிங் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திகிரி ஜங்ஷன் முதல் அந்திவாடி ஸ்டேடியம் வரையிலும், , தர்கா முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து வென்ட் இந்தியா கம்பெனி வரை, கொத்தூர் ஜங்ஷனில் இருந்து டிவிஎஸ் ரோடு ஜங்ஷன் வரையிலும்,
சப் -கலெக்டர் அலுவலகம் முதல் சென்ட்ரல் எக்சைஸ் அலுவலகம் ( லேக் ரோடு.) வரையிலும், பத்தலபள்ளி ஜங்ஷனில் இருந்து காளிகாம்பாள் கோவில் ஜங்ஷன் வரை. இந்த 5 இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் நடைபயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
இன்று காலை, இந்த நிகழ்ச்சியை, ஓசூர் சப்-&கலெக்டர் அலுவலகம் முன்பு கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட எஸ்.பி, சரோஜ்குமார் டாகுர், பொதுமக்களுடன், மாநகராட்சி பூங்கா பகுதிவரை நடைபயணம் மேற்கொண்டார்.
மேலும், அவர் நிருபர்களிடம் கூறும் போது"இது ஒரு சோதனை முயற்சியாகும். இந்த முயற்சிக்கு, பொதுமக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை
பொறுத்து, நேரத்தை மாற்றவும், குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நடைபயணத்தையொட்டி, இந்த பகுதிகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் மற்றும் அவசர சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். ஓசூர் பகுதி வழியாக கஞ்சா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை, பேரிகை, பாகலூர் ஆகிய சோதனை சாவடிகளில் "பார்டர் போலீஸ் கமாண்டோ" படை அடுத்த வாரம் முதல் செயல்படுத்தப்படும்" என்றார்.
மேலும் இதில், ஓசூர் டி.எஸ்.பி.சிவலிங்கம், டவுன் இன்ஸ் பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர் .