உள்ளூர் செய்திகள்
காலி மதுபாட்டில்களுடன் கிடந்த அட்டை பெட்டி.

வீட்டின் முன்பு கிடந்த அட்டை பெட்டி

Published On 2022-04-03 13:55 IST   |   Update On 2022-04-03 13:55:00 IST
சீர்காழியில் காலி மதுபாட்டில்களுடன் வீட்டின் முன்பு கிடந்த அட்டை பெட்டியை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சீர்காழி:

சீர்காழி ஈசான்ய தெருவை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டின் முன்பு மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வந்து 2 அட்டைப் பெட்டிகளை வைத்து விட்டு சென்றுள்ளார். பல மணி நேரம் கழித்து வெளியே வந்த வீட்டின் உரிமையாளர் 2 அட்டைப் பெட்டிகள் கட்டி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பெட்டியில் வெடி பொருட்கள் இருக்குமோ என்று அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

போலீசார் விரைந்து சென்று வீட்டில் வைக்கப் பட்டிருந்த அட்டைப் பெட்டியை பாதுகாப்பாக கொண்டு சென்று திறந்து பார்த்தனர். உள்ளே 2 அட்டை பெட்டிகளிலும் காலி மது பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இருக்கும் பணி சுமையில் இது வேறா என நொந்துக் கொண்டனர்.

மர்ம நபர் காலி மதுபான பாட்டில்களை ஏன் இங்கு வைத்து போலீசாரின் நேரத்தை வீணடிக்க வேண்டும் என நொந்து கொண்ட போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை கைப்பற்றி மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலி மதுபான பாட்டில் களை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து வீட்டின் முன்பு வைத்து சாவகாசமாக வைத்து செல்லும் நபரின் சிசிடிவி காட்சி பொது மக்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Similar News