உள்ளூர் செய்திகள்
ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.

வில்வவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Published On 2022-04-03 13:23 IST   |   Update On 2022-04-03 13:23:00 IST
திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
பாபநாசம்:

பாபநாசம் தாலுக்கா திருவைகாவூர் வில்வவ னேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 6-ம் தேதி நடைபெறுவதை யொட்டி பாபநாசத்தில் வட்டாட்சியர் மதுசூதனன் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அறநிலைத் துறை திருவிழா சமயத்தில் அனைத்து நடவடிக்கை களையும் தக்க முன்னேற் பாடுகளுடன் ஏற்பாடு செய்ய வேண்டும். நடமாடும் மருத்துவ குழு, தயார் நிலையில் தீயணைப்புத்துறை, சுழற்சி முறையில் காவல்துறை காவல் பணி, மின்சாரத் துறையினர் மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்தல், ஊராட்சியில் பாதுகாக்கப் பட்ட குடிநீர், தெருவிளக்குகள் பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல், சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வது, சாலைப் பணிகள் உள்பட அனைத்து வசதிகளையும் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் செயல் அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News