உள்ளூர் செய்திகள்
யானை மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

நங்கூரன்பிலாவிளை பிரம்மசக்தி அம்மன், சுடலைமாடசாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

Published On 2022-04-03 13:22 IST   |   Update On 2022-04-03 13:22:00 IST
நங்கூரன்பிலாவிளை பிரம்மசக்தி அம்மன், சுடலைமாடசாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் - யானை மீது புனித நீர் ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு
கன்னியாகுமரி:

மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள நங்கூரன் பிலாவிளை ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன், ஸ்ரீசுடலை மாடசாமி கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 11 மணிக்கு பிரம்மசக்தி அம்மன், சுடலை மாடசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 

அதன் பிறகு அலங்கார தீபாராத னையும், மதியம் 1 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு உதயகீதம் இன்னிசை கச்சேரி நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை யொட்டி நேற்று நண்பகல் 12 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. மதியம் 3 மணிக்கு இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் பிரசன்ன பார்வதி கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் யானை, குதிரை, முத்துக்குடை மற்றும் சிங்காரி மேளத்துடன் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் ஒரே சீருடை அணிந்திருந்தனர்.

இரவு 10.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும், 11 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுத்தலைவர் துரைப்பழம், செயலாளர் கிருஷ்ணதங்கம், பொருளாளர் ஐயப்பன், ஆலோசகர் சி.எல். ராஜா, துணைத் தலைவர் லிங்கராஜா, துணை செயலாளர் செல்வ குமார், செயற்குழு உறுப்பினர்கள், கோவில் குடும்பத்தினர் இணைந்து செய்துள்ளனர்.

Similar News