உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தொழிலதிபர் என கூறி மோசடியில் ஈடுபட்டவர் தறைமறைவு

Published On 2022-04-03 13:15 IST   |   Update On 2022-04-03 13:15:00 IST
கும்பகோணத்தில் தன்னை தொழிலதிபர் என கூறி வர்த்தக பிரமுகர்களிடம் ரூ.25 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தவர் தறைமறைவாகியுள்ளார்.
கும்பகோணம்:

கும்பகோணம் ஈபி.காலனி பகுதியை சேர்ந்தவர் முத்தையா இவரது மகன் சுப்பிரமணியன் (வயது.40) இவர் மோதிலால் தெருவில் பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வந்தார்.

இதனை அடுத்து கும்பகோணம் அருகே தாராசுரம் எலுமிச்சங்காய் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடராஜேஷ் மர இழப்பகம் நடத்தி வந்த நிலையில் சுப்பிரமணியன் தன்னை தொழிலதிபர் எனக்கூறி கும்பகோணத்தில் மிகப்பெரிய பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருவ தாகவும் பர்னிச்சர் கடைக்கு தேவையான மூலப் பொருட்களை வெங்கட ராஜேஷிடம் வாங்கியுள்ளார்.

இதுபோல் தன்னை தொழிலதிபர் என கூறி சுப்பிரமணியன் கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த 16 வர்த்தக பிரமுகர்களிடம் ரூ.25 லட்சம் முதல் கோடிக்கணக்கான முதலீடு வாங்கி குவித்து இருந்த நிலையில் திடீரென சுப்பிரமணியன் தலை மறைவாகி உள்ளதாக கும்பகோணம் மேற்கு போலீசாரிடம் வெங்கட ராஜேஷ் புகார் அளித்திருந்தார்.

மேலும் 16 வர்த்தக பிரமுகர்களும் சுப்பிர மணியன் மீது தனித்தனியாக போலீசாருக்கு புகார் மனு கொடுத்தனர்.
புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் தலைமறைவான தொழிலதிபர் சுப்பிர மணியனை தேடி வருகின்றனர்.

Similar News