உள்ளூர் செய்திகள்
ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் : தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக மோசமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். குறிப்பாக தேரூர், மருங்கூர், கொட்டாரம், அழகியபாண்டிய புரம், தோவாளை, ஆரல் வாய்மொழி மற்றும் மேற்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளிலும் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான அரிசி வழங்காவிட்டால் பொதுமக்கள் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறார்கள்.
குறிப்பாக தேரூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே கூட்டுறவு சங்க இணை பதிவாளர் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் ஆகியோர் உடனடி நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.