உள்ளூர் செய்திகள்
.

எலக்ட்ரீக்கல் கடைக்காரரின் வங்கி கணக்கில் நூதன முறையில் 65 ஆயிரம் பணம் திருடியவர் சிக்கினார்

Published On 2022-04-02 16:30 IST   |   Update On 2022-04-02 16:30:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எலக்ட்ரீக்கல் கடைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.65 ஆயிரம ¢மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தின்னூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது38). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீக்கல் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 22&ந்தேதி அன்று இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் மாயமானது. இது குறித்து அவர் வங்கியை அணுகி விபரம் கேட்டார். அப்போது உங்களது வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் மர்ம நபர் பணம் எடுத்துள்ளதாக கூறினார். 

இதனால் பதறி போன அவர் உடனே கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது தினேஷ்குமார் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் வெப்சைட் மூலம் பணம் திருடிய கர்நாடகமாநிலம், ஆனேக்கல் அடுத்துள்ள பல்லூர் பகுதியை சேர்ந்த காந்தராஜ் (24) என்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News