உள்ளூர் செய்திகள்
.

மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது

Published On 2022-04-02 16:17 IST   |   Update On 2022-04-02 16:17:00 IST
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் பெங்களூரு&கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அதில் 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் கஞ்சா கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. 

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை சேர்ந்த பெரியகண்ணன் (வயது31), சூளகிரி கல்லுகுறுக்கியை சேர்ந்த முருகன் (25),  அட்டகுறுக்கியை சேர்ந்த ரஞ்சித்குமார் (19),  கொடியூரை சேர்ந்த  சந்தோஸ் (30) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். 

கைதான அவரிகளிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 1Ñ லட்சம் மதிப்பு இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான அவர் களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News