உள்ளூர் செய்திகள்
ஓசூரில், இரும்பு கம்பியால் அடித்து கூலி தொழிலாளி கொலை வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இரும்பு கம்பியால் அடித்து கூலி தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் சந்தோஷ் (வயது20). கடந்த 2020ஆம் ஆண்டு, இவரது சகோதரி அஸ்வினி என்பவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு தனது மாமாவின் நண்பரான ஓசூர் காளேகுண்டா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி யாரப் என்பவர்தான், தனது சகோதரியை கொலை செய்ய தூண்டியதாக கருதி, அவரை பழிவாங்க முடிவு செய்தார்.
இதையடுத்து நேற்று ஓசூர் சானசந்திரம் பகுதியில் இருந்த யாரப்பை, இரும்புக்கம்பியால் தாக்கியும், கல்லை தூக்கிப் போட்டும் கொன்றார்.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் யாரப் பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தோசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.