உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே ரூ.12 லட்சம் பொருட்களுடன் சென்ற லாரி கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ரூ.12 லட்சம் பொருட்களுடன் சென்ற லாரி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், - சூளகிரி அருகே காமன்தொட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் உதிரிபாகங்களை கடந்த 29-ந்தேதி இரு லாரிகளில் ஏற்றி அனுப்பபட்டது.
இந்த உதிரிபாகங்களை பெங்களூரு இளங்கா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அந்த லாரி அந்த நிறுவனத்திற்கு போய் சேரவில்லை. அந்த லாரிகளை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக தெரியவந்தது.
இது குறித்து சூளகிரி போலீசில் காமன்தொட்டி தனியார் நிறுவனர் கார்த்திக் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.