உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

முந்தி செல்ல முயன்ற போது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

Published On 2022-04-02 14:55 IST   |   Update On 2022-04-02 14:55:00 IST
முந்தி செல்ல முயன்ற போது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் திருமால் சேகரன் (32). பட்டதாரியான இவர் அரசு வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திருமால் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கோடம்பாக்கம் நோக்கி ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார் வடபழனி 100 அடி சாலையில் உள்ள சிக்னலை கடந்து சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளோடு நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Similar News