உள்ளூர் செய்திகள்
சூளகிரி போலீஸ் நிலையத்தை 2 கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

சூளகிரி அருகே பெண்களை கேலி-கிண்டல் செய்து தாக்கிய கும்பல்-பரபரப்பு

Published On 2022-04-02 14:32 IST   |   Update On 2022-04-02 14:32:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெண்களை கேலி& கிண்டல் செய்து தாக்கிய கும்பலை கைது செய்ய கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பீர்பள்ளி, மல்லசந்திரம் ஆகிய 2 கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் அருகே உள்ள பெரியகுதிபலா  கிராமத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில் பெரியகுதிபலா கிராமத்தை சேர்ந்த 10&க்கும் மேற்பட்ட கும்பல், அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை கேலி& கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த 27&ந் தேதி, பெண்களை பெரியகுதிபலா கிராமத்தை சேர்ந்த 4 பேர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இதை தட்டி கேட்ட 2 பெண்களை அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் திருமணமான ஒரு பெண்ணுக்கு, கருக்கலைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள், இந்த சம்பவம் பற்றி சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பீர்பள்ளி, மல்லசந்திரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 100&க்கும் மேற்பட்டோர்  சூளகிரி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், பெண்களை தொடர்ந்து கேலி & கிண்டல் செய்து தாக்கி வரும் பெரியகுதிபலா கிராமத்தை சேர்ந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது.

இதையடுத்து டி.எஸ்.பி.சிவலிங்கம், இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 2 அல்லது 3 நாளில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதை ஏற்று 2 கிராமங்களை சேர்ந்த மக்களும், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News