உள்ளூர் செய்திகள்
குழந்தைகள்

பேரூராட்சியில் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

Published On 2022-04-01 16:22 IST   |   Update On 2022-04-01 16:22:00 IST
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேரூராட்சியில் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக பணியாளர் மகாலட்சுமி பங்கேற்று பேசுகையில், குழந்தைகளுக்கு அன்றாடம் கல்வி கூடங்கள் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் சிறுவர்களை தொழில் செய்யும் இடங்களில் அமர்த்துதல், மனரீதியாக சிறார்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், அதனை தடுக்கும் விதமாக கையாளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார்.

பேரூராட்சி செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி, குழந்தைகள் பாதுகாப்பு உதவி அலுவலர் ஜூலி மற்றும் பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News