உள்ளூர் செய்திகள்
வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு எச்சரிக்கை
வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என பரமக்குடி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பரமக்குடி
பரமக்குடி நகராட்சி ஆணையாளர் திருமால்செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:-
பரமக்குடி நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர்வரி, கடைகள் வாடகை உள்ளிட்டவை ரூ.6 கோடிக்குமேல் வராமல் பாக்கியாக உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீசு கொடுத்தும் நகராட்சி அலுவலர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. ஆனாலும் இந்த வரிகளை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
வரி செலுத்த வருபவர்கள் பகல் நேரத்தில் எந்நேரமானாலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கவுண்டரில் வரிபாக்கியை செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.
நீண்டகால பாக்கியாக நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். முதல்கட்டமாக அவர்களது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். பின்பு மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்களது பாக்கிகளை செலுத்த வேண்டும். இல்லை என்றால் கடைகளுக்கு சீல்வைத்து பூட்டு போடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.