உள்ளூர் செய்திகள்
கைதான வாலிபர் ஹரீசையும், பறிமுதல் செய்யப்பட்ட மான் கறியையும் படத்தில் காணலாம்.

பென்னாகரம் அருகே மொபட்டில் மான்கறி கடத்திய சிறுவன் கைது

Published On 2022-03-31 15:09 IST   |   Update On 2022-03-31 15:09:00 IST
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மொபட்டியில் மான்கறி கடத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்
பென்னாகரம், 

கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திற்கு புள்ளி மான் கறி கொண்டு வரப்படுவதாக மாவட்ட வன அலுவலர் அப்பாலநாயுடுவிற்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் பென்னாகரம் சரக அலுவலர் முருகன் தலைமையில் வனவர் செல்லமுத்து, வனக் காப்பாளர்கள் ஆனந்தராஜ். தங்கவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் பென்னாகரம்&தருமபுரி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது பி.அக்ரகாரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மொபட்டில் சந்தேகப்படும் வகையில் வந்த மொப்பட்டை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மொபட்டில் புள்ளி மான் கறி கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வெள்ளிமலை கிராமத்தை சேர்ந்த காவேரி மகன் ஹரிஸ் (வயது 17) என்பது தெரியவந்தது. மேலும் இவரைப் பின்தொடர்ந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன் (37) என்பவர் தப்பி சென்றுவிட்டார்.

தப்பி ஓடிய பூபாலனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் மான்கறி கடத்தி வந்த ஹரிஸ் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் தருமபுரி மாவட்ட காப்பு காடுகளில் விலங்கு களை வேட்டையாடும் நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News